தளபதி விஜய்யின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் 9ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 27இல் மலேசியாவில் இடம்பெற்ற இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தளபதி இரசிகர்களின் கொண்டாட்டத்துடன் 'தளபதி திருவிழா' என்ற பெயரில் பிரம்மாண்டமாக இடம் பெற்றிருந்தது.
இதனையடுத்து கடந்த 3ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 'ஜனநாயகன்' திரைப்படத்தினுடைய Trailer வெளியாகியிருந்த நிலையில், குறித்த Trailerகளானவை வெளியாகிய 24மணி நேரத்தில் Youtube மற்றும் Instagram தளங்களில் 8 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.