T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 19 ஆவது போட்டியில் சிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை எடுத்தது. சிம்பாப்வே அணியின் ஆரம்ப வீரர் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ஓட்டங்களை அடித்து அசத்தினார்.
இதனையடுத்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் சிம்பாப்வே அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.