பெண்களுக்கான T - 20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் நேற்று இந்தியா நியூசிலாந்து போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பணியில் இல்லாத பெண் பாதுகாவலருடன் இணைந்து ஜெமிமா திடீரென இந்தி பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. சுமார் 30,000 பேர் வரை பார்த்துள்ளனர். இதுகுறித்து இந்திய அணி சுழல் வீரர் அஷ்வின் அளித்த பதில் செய்தியில்,‘நடனம் சூப்பர்’ என தெரிவித்துள்ளார்.