அதனை தொடர்ந்து காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2000ம் ஆண்டிற்கு பிறகு திருமணம் ,குடும்பம் என மாறிவிட்டார்.
ஆனாலும் அவர் மீண்டும் நடிக்க வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து அண்மையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், கேள்விகள் கேட்கப்பட்டது.இந்தக் கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ‘என் குடும்பத்தில் இன்னொருவரையும் நடிக்க வைக்க பார்க்கிறீர்களா?' என்று கேட்டு அஜித் என்னை அடிப்பாரே...’ என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.
மேலும், ‘‘ஷாலினி, குடும்பத்தை கவனிப்பதில் ரொம்ப விறு விறுப்பாக இருக்கிறார். 2 குழந்தைகளையும் கவனமாக பாதுகாத்து வருகிறார். இதனால் கண்டிப்பாக ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார்’’ என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.