Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
உடல் தகுதியை விரைவில் நிரூபித்துக்காட்டுவேன் – பானுக

SoorriyanFM Gossip - உடல் தகுதியை விரைவில் நிரூபித்துக்காட்டுவேன் – பானுகSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

669 Views
இலங்கை கிரிக்கெட் அணிக்காக எதிர்வரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும், அதற்கான உடல்தகுதியை தக்கவைத்துக் கொள்ளாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிலைத்திருப்பது மிகவும் கடினமான விடயம் என இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனது உடல்தகுதி தொடர்பில் மிகப் பெரிய அர்ப்பணிப்பையும், அவதானத்தையும் செலுத்தி வருகிறேன். எனக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களிலும் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மாத்திரம் தான் இவற்றையெல்லாம் செய்கிறேன். எனவே என்னுடைய உடல் தகுதியை உரிய முறையில் பேணிக் கொண்டால் நிச்சயம் என்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியும். அதேபோல, எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆயுட்காலமும் அதிகரிக்கும்.

இலங்கை கிரிக்கெட் அணியில் உடல்தகுதியை நிரூபிக்க பின்பற்றப்படுகின்ற பரிசோதனை மிகவும் கடினமானது. எனினும், உடல் தகுதி தொடர்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் கிரிக்கெட் விளையாடவே நான் அதிகம் முயற்சி செய்தேன் என்றும் பானுக குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top