ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய 35 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 12 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த முறைதான் ஐபிஎல் போட்டியில் முதல் முதலாக அறிமுகமாகி விளையாடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.