இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' கடந்த 13 ம் திகதி வெளியானது.
பீஸ்ட் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.