நயன்தாரா படம் மூலம் கோலிவுட் வருகிறார் தோனி என்று சமூக வலைதளங்களிலும் பேச்சாக கிடந்தது. இந்நிலையில் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
சஞ்சய் என்பவருடன் தோனி என்டர்டெயின்மென்ட் தற்போது வேலை செய்யவில்லை.நாங்கள் அப்படி யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை.இது போன்ற பொய்யான தகவல்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இருப்பினும் எங்கள் குழு பல்வேறு சுவாரஸ்யமான திட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறது.அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம்.அது வரை காத்திருக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா பற்றி இப்படி ஏதாவது வதந்தி பரவுவது வழக்கமாகிவிட்டது.அதனால் தோனி விஷயத்தில் நயன்தாரா பற்றி பரவிய தகவலால் ஆச்சரியம் இல்லை.
நயன்தாராவுக்கு ஜூன் 9ம் திகதி திருப்பதியில் திருமணம்.அதனால் அவர் திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.