20 மீட்டர் உயரமுள்ள தென்னை மரங்களில் உயிரைப் பணயம் வைத்து ஏறி தேங்காய் பறிக்கும் ஆபத்தான முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கேரள மாநிலம் தயாராகிவிட்டது.
கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம் பொறியாளர்கள் குழு, தென்னை விவசாயத்திற்காக வடிவமைத்துள்ள 'கோக்கோபாட்' என்ற Roboவை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 11 கிலோ எடை கொண்ட இந்த ரோபோவை மனிதர் எளிதாகத் தூக்கிச் செல்ல முடியும்.
மரத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டு செங்குத்தாக ஏறும் திறன் கொண்ட இந்த இயந்திரம், 20 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தை ஒரு நிமிடத்தில் ஏறிவிடும்.
Remote மூலம் இந்த Roboவை தரையில் இருந்தபடியே இயக்க முடியும். இதில் உள்ள இயந்திரக் கைகள் மற்றும் வெட்டும் கருவிகள், தேங்காய்களை துல்லியமாகப் பறிப்பதோடு, தேவையற்ற மட்டைகளையும் வெட்டி அப்புறப்படுத்தும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 2 மணி நேரம் வரை இது தொடர்ந்து இயங்கும்.
இத்தொழில்நுட்பம் மூலம் செலவு குறைவதுடன், விபத்துக்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.