தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அருண் விஜய் தற்போது 'O My Dog ' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தினை இயக்குனர் ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் கதையானது நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவுக்கும் அவர் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
'O My Dog' எனும் இந்தத் திரைப்படமானது இந்த மாதம் 29ம் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.